\
திருமணம்
திருமணம்எக்ஸ் தளம்

25 நாட்களில் 52 லட்சம் திருமணங்கள்; ரூ.7.5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் எதிர்பார்ப்பு

இந்தியாவில் நாளை முதல் டிசம்பர் 15- ஆம் தேதி வரையிலான 25 நாட்களில், சுமார் 52 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளதாகவும், இதன் மூலம் 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மாபெரும் வர்த்தகம் நடைபெறும் எனவும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கணித்துள்ளது.
Published on: 

இந்தியாவில் நாளை முதல் டிசம்பர் 15- ஆம் தேதி வரையிலான 25 நாட்களில், சுமார் 52 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளதாகவும், இதன் மூலம் 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மாபெரும் வர்த்தகம் நடைபெறும் எனவும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கணித்துள்ளது. இதுகுறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

திருமணம்
திருமணம்கோப்புப்படம்

இந்தியாவில் நடைபெறும் திருமணங்களைச் சுற்றி விருந்தோம்பல், கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கான செலவு நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நடுத்தரக் குடும்பங்களில் 4 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் திருமணங்கள் நடக்கின்றன. ஆடம்பர திருமணங்களில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவு செய்யப்படுகிறது. 2025ஆம் ஆண்டு ஆறரை லட்சம் கோடியாக இருந்த திருமண வர்த்தகம் தற்போது ஏழரை லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.

வட இந்தியாவை பொறுத்தவரை நவம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரையிலான திருமண சீசனில் சராசரியாக நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான திருமணங்கள் நடைபெற உள்ளன. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 5 லட்சம் திருமணங்கள் மூலம் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான 'கெய்ட்' தெரிவித்துள்ளது. மொத்த வர்த்தகமான ஏழரை லட்சம் கோடி ரூபாயில் தங்கம் மற்றும் ஆபரணங்கள் விற்பனை ஒரு கோடியே 20 லட்சம் கோடி ரூபாயையும், ஆடைகள் விற்பனை 90 ஆயிரம் கோடி ரூபாயையும் எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம்
திருமணம்கோப்புப்படம்

உணவு மற்றும் கேட்டரிங் துறைக்கு 75 ஆயிரம் கோடி ரூபாயும், திருமண மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாயும் வருவாய் கிடைக்கும். நிகழ்வு மேலாண்மை மற்றும் மலர் அலங்காரத்திற்குத் தலா 37 ஆயிரத்து 500 கோடி ரூபாயும், போக்குவரத்து மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்குத் தலா 30 ஆயிரம் கோடி ரூபாயும், புகைப்படம் மற்றும் அழகுக்கலை சேவைகளுக்குத் தலா 22 ஆயிரம் 500 கோடி ரூபாயும் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் சுமார் ஒன்றேகால் கோடி பேருக்குப் பகுதி நேர மற்றும் தற்காலிக வேலைவாய்ப்புகள் உருவாகும். டிஜிட்டல் அழைப்பிதழ்கள், செயற்கை நுண்ணறிவுத் திட்டமிடல் மற்றும் ஆன்லைன் சேவைகள் திருமணத் துறையில் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.