\
road accident
road accident web

தினமும் இத்தனை பேரா? இந்திய சாலைகளில் அதிகரிக்கும் உயிர் பலிகள்.. அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரம்!

நாட்டில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 59 சாலை விபத்துகள் நிகழ்வதாகவும், அதில் 21 பேர் உயிரிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
Published on

இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 5,13,000 சாலை விபத்துகளில் 1,83,000 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 59 சாலை விபத்துகள் நிகழ்வதாகவும், அதில் 21 பேர் உயிரிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சராசரியாக தினமும் 502 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன. சாலை விபத்து மரணங்களில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்திலும் தமிழ்நாடும் இரண்டாம் இடத்திலும் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டும் 27,550 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

road accident
road accidentweb

தமிழ் நாட்டில் சாலை விபத்துகளில் 18,505 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாபில் குறைந்தபட்சமாக 3,062 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. 2025இல் தமிழ்நாட்டில் 71,387 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.

road accident
மும்பை | பெண் போராட்டக்காரரிடம் போலீசார் அத்துமீறல்.? காவல்துறை விளக்கம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com