ம.பி | 50,000 ’கோஸ்ட்’ ஊழியர்கள்.. ரூ.230 கோடி சம்பள மோசடி? போராட்டம் வெடிக்காதது ஏன்?
மத்தியபிரதேசத்தில், அரசு ஊழியர்கள் 50,000 பேருக்கு ஆறு மாதங்கள் சம்பளம் வழங்கப்படாமல் மோசடி நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மத்திய பிரதேச வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய மோசடி என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆங்கில செய்தி நிறுவனத்தில் வெளியான தகவலின்படி, அடையாள அட்டை, பெயர், ஊழியர்களுக்கான அடையாள எண் என்று 50000 ஊழியர்களுக்கு எல்லா ஆதாரங்களும் இருக்கிறது. ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்கான அவர்களுக்கு ஆறு மாதமாக அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. எனவே, இதில் 230 கோடிவரை மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சம்பள மோசடி அம்பளமானது எப்படி
மே 23 ஆம் தேதியன்று, கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் (CTA) அனைத்து வரைதல் மற்றும் விநியோக அதிகாரிகளுக்கு (DDOs) அனுப்பிய கடிதம் ஒன்றினை அனுப்பினார்.
அதில், பெயர் மற்றும் பணியாளர் குறியீடு உள்ள ஊழியர்களுக்கு டிசம்பர் 2024 முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. பணியாளர் குறியீடுகள் இருந்தாலும், அவர்களது IFMIS முழுமையடைவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இவர்கள் அனைவரும் போலி ஊழியர்களா? இல்லை வேறு எதாவது பிரச்னை இருக்கிறதா என்கிற கோணாத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து, 6,000க்கும் மேற்பட்ட டிடிஓக்கள் விசாரணையின் கீழ் உள்ளனர், மேலும் 15 நாட்களில் ரூ.230 கோடி மோசடி நடந்திருக்க வாய்புள்ளதாகவும் அதனை விளக்குமாறு டிடிஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் பாஸ்கர் லஷ்கர் NDTV இடம் இதுகுறித்து தெரிவிக்கையில், “நாங்கள் இதுகுறித்து தொடர்ந்து தரவு பகுப்பாய்வை மேற்கொள்கிறோம். தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்
எனவே, ஒவ்வொரு டிடிஓவும் தங்கள் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்படாத ஊழியர்கள் யாரும் பணிபுரியவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பின் இருக்கும் மர்மம் என்ன என்பது முழு விசாரணைக்கு பிறகே வெளிச்சத்துக்கு வரும்.