கட்டுமான தொழிலாளர்க‌ளுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை - அரவிந்த் கெஜ்ரிவால் ‌

கட்டுமான தொழிலாளர்க‌ளுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை - அரவிந்த் கெஜ்ரிவால் ‌
கட்டுமான தொழிலாளர்க‌ளுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை - அரவிந்த் கெஜ்ரிவால் ‌

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்க‌ளுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் ‌அரவிந்த் கெஜ்ரிவால் ‌அறிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இந்தியாவில் இதுவரை 562 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனிடையே நேற்று மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி அடுத்த ஏப்ரல் 14-ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து, பிற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கின்றனர்.

இதனால் மாநில அரசுகள் மக்களுக்கு நிவாரண தொகையினை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்க‌ளுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் ‌அரவிந்த் கெஜ்ரிவால் ‌அறிவித்துள்ளார்.


டெல்லியில் கடந்த 40 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று ஏற்படவில்லை என்றாலும், தொடர்ந்து விழிப்புடன் இருக்‌க வேண்டும் என்றும் ஊரடங்கு மற்றும் மு‌டக்கம் காரணமாக டெல்லியில் யாரும் பசியால் துடிக்கக்கூடாது என்பதற்காக உணவு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். டெல்லியில் கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 30 பேர் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com