மைசூர் டூ கேரளா... லாரியில் கடத்தப்பட்ட 20 கோடி மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல்

மைசூர் டூ கேரளா... லாரியில் கடத்தப்பட்ட 20 கோடி மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல்
மைசூர் டூ கேரளா... லாரியில் கடத்தப்பட்ட 20 கோடி மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல்

மைசூரிலில் இருந்து கண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல்.. திருவனந்தபுரத்தில் கேரள சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை.

திருவனந்தபுரம் ஆற்றிங்கால் பகுதியில் கேரள சுங்கத்துறையின் பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில், கார்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கேரளாவிற்கு கண்டெய்னர் லாரி மூலம் கடத்திவரப்பட்ட, 20 கோடி ரூபாய் மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பிடிபட்டது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குல்வந்த் சிங், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவின் கண்ணூர் கொண்டு சென்று அங்கிருந்து கேரளாவின் பிற பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கேரள சுங்கத்துறையின் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வந்த “நேஷனல் பெட்மிட்” உள்ள கண்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக கஞ்சா பார்சல்கள் இருப்பது தெரிந்தது. கைப்பற்றப்பட்ட 500 கிலோ கஞ்சாவின் மதிப்பு கேரள சந்தை நிலவரப்படி 20 கோடி ரூபாய் என்றும் தெரிய வந்தது.

இதையடுத்து லாரியில் இருந்த இருவர் தப்பிச் சென்ற நிலையில், எஞ்சியிருந்த இருவரை கேரள சுங்கத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குல்வந்த் சிங் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா என்பதும் தெரிந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் மைசூரில் இருந்து கஞ்சாவை கேரள மாநிலம் கண்ணூர் கொண்டு சென்று அங்கிருந்து கேரளாவின் இதர பகுதிகளில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

கேரளாவில் பிடிபட்ட அதிக மதிப்பிலான, அதிக அளவிலான கஞ்சா கடத்தல் இது என கூறப்படுகிறது. இத்தனை அதிக தொகைக்கு இத்தனை அதிக அளவினான கஞ்சாவை கடத்தி விற்பனை செய்வதன் பின்னணியில் பெரும் புள்ளிகள் அடங்கிய கும்பல் இருக்க வேண்டும் எனவும் கேரளாவில் மட்டுமல்லாது கஞ்சாவை வெளிநாடுகளுக்கு கடத்தும் திட்டமும் இருக்க வேண்டும் என சுங்கத்துறை சந்தேகிக்கிறது. அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


ஏற்கனவே பெங்களூருவில் கைதான கேரளாவைச் சேர்ந்த மயக்க மருந்து கும்பலுக்கும் கேரள திரையுலக நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கு தொடர்புள்ள விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பிடிபட்டிருப்பது போதை பொருள் உபயோகத்தில் கேரளாவின் நிலையை பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com