எமெர்ஜென்சி
எமெர்ஜென்சிfb

இந்திய வரலாற்றின் கருப்பு பக்கமும், தேசத்தின் வளர்ச்சியும்! எமெர்ஜென்சி காலம் ஓர் வரலாற்றுப் பார்வை!

50 ஆண்டுகளுக்கு முன்பு 1975 ஆம் ஆண்டு இதே நாளில் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அறிவித்த எமெர்ஜென்சி, மொத்தம் 21 மாதங்கள் நீடித்தது. இந்த அவசர நிலை இந்தியாவின் வரலாற்றில் எப்போதும் நீங்காத கரையாக மாறிவிட்டது.
Published on

இந்தியாவின் வரலாற்றில் எப்போதும் நீங்காத கரை!!

ஜூன் 25 ஆம் தேதியை ’சம்விதான் ஹத்யா திவாஸ்’ அதாவது அரசமைப்பு படுகொலை தினம் என்று அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 இந்திய ஜனநாயகத்தில் ஒரு கருப்பு நாளாகவே பார்க்கப்படுகிறது. எந்தவொரு அரசையும் மோசமாக விமர்சிக்க எதிர்க்கட்சிகள் இந்த நாளையே அதிகம் குறிப்பிடுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் 50 ஆண்டுகளுக்கு முன்பு 1975 ஆம் ஆண்டு இதே நாளில் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அறிவித்த எமெர்ஜென்சி. மொத்தம் 21 மாதங்கள் நீடித்த இந்த அவசர நிலை இந்தியாவின் வரலாற்றில் எப்போதும் நீங்காத கரையாக மாறிவிட்டது.

மொத்தம் 21 மாதங்கள் நீடித்த இந்த அவசர நிலை இந்தியாவின் வரலாற்றில் எப்போதும் நீங்காத கரையாக மாறிவிட்டது.

உச்சத்தில் இருக்கும்போது செய்யும் சில தவறுகள் காத்திற்கும் பேசப்படும்!!

எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்குமே அவர்களின் அரசியல் பயணத்தில் ஏற்றமும் இருக்கும் இறக்கமும் இருக்கும். இந்த கிராஃப் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றம் அடைந்துகொண்டே இருக்கும். அதை புரிந்துகொள்ளாமல் சில தலைவர்கள் தாங்கள் உச்சத்தில் இருக்கும்போது செய்யும் சில தவறுகள் காலத்துக்கும் அவர்களின் அரசியல் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

இந்திரா காந்திக்கும் அப்படியான உச்ச காலகட்டம் 1966 ஆம் ஆண்டுகளிலேயே தொடங்கிவிட்டது. லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்கு பிறகு இந்தியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் இந்திரா காந்திக்கு 355 பேரும், மொரார்ஜி தேசாய்க்கு 169 பேரும் வாக்களித்து அவரை பிரதமராக்கினர். அடுத்து 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு இந்திரா காந்தி வெற்றி பெற்றார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் அதிகரிக்க 1969 ஆம் ஆண்டு அந்த கட்சி இரண்டாக உடைந்து ஸ்தாபன காங்கிரஸும் உருவானது.

பொக்ரான் அணுகுண்டு சோதனை
பொக்ரான் அணுகுண்டு சோதனை

இந்திரா செய்த துணிச்சலான செயல்கள்.. வரலாற்றில் இடம்பெறும்..

இதற்கு பிறகு சில ஆண்டுகள் இந்திரா காந்திக்கு வரலாற்றில் பெரும் முக்கியத்துவத்தை கொடுத்தன. குறிப்பாக வங்கிகள் தேசியமையமாக்கப்பட்டது, பஞ்சாப் பிரிவினை சமையத்தில் சீக்கியர் பெரும்பான்மையினர் இருந்த பகுதி பஞ்சாப் மாநிலமாகவும், இந்துக்கள் பெரும்பான்மையினர் உள்ளதை ஹரியானா என்று துணிச்சலுடன் அறிவித்தது, வங்கதேசம் பிரிவினை, பாகிஸ்தானுடனான வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சிம்லா ஒப்பந்தம், பொக்ரான் அணுகுண்டு சோதனை என அடுத்தடுத்த பல நிகழ்வுகள் வரலாற்றில் இந்திராவின் பெயரை பதியவைத்தன.

ஆனால் இந்திரா காந்தியின் இந்த உச்சம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மன்னர் மானிய ஒழிப்பு விவகாரத்தில் சட்ட நெருக்கடி ஏற்பட்டதால் 1971 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை முன்கூட்டியே நடத்துவதாக இந்திரா அறிவித்தார். அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். ஆனால் இந்த தேர்தலில் இந்திரா காந்தி முறைகேடு செய்திருப்பதாகவும் எனவே அவரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவரை எதிர்த்து போட்டிட்டியிட்ட சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜ் நரேன் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

தேர்தலில் இந்திரா காந்தி முறைகேடு செய்திருப்பதாகவும் எனவே அவரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவரை எதிர்த்து போட்டிட்டியிட்ட சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜ் நரேன் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

நாட்டில் முற்றிய நெருக்கடி.. இந்திராவை சூழ்ந்த விமர்சனங்கள்..

மறுபக்கம் நாட்டில் நிலவிய மோசமான பொருளாதார சூழலால் விலைவாசி உயர்வு, வேலையின்மையால் அரசு மீது கடுமையான அதிருப்திகள் வர தொடங்கின. குறிப்பாக 1974 ஆம் ஆண்டு பீகாரில் விலைவாசி உயர்வு, பஞ்சம், வேலையின்மையைக் கண்டித்து முழுப்புரட்சி நடைபெற்றது. இதற்கிடையே இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி தனது வாகன தொழிற்சாலையின் பயன்பாட்டுக்கு ராணுவ தளத்தை பயன்படுத்தியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

1974 ஆம் ஆண்டு பீகாரில் விலைவாசி உயர்வு, பஞ்சம், வேலையின்மையைக் கண்டித்து முழுப்புரட்சி நடைபெற்றது.

இவை தவிர ஜார்ஜ் பெர்னான்டஸ் தலைமையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 10 லட்சத்துக்கும் அதிகமான ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி நாடுமுழுவதும் கடும் நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருந்த அதே நேரத்தில் தான் 1971 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றி தொடர்பான வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என நீதிபதி சின்ஹா தீர்ப்பு வழங்கினார். மேலும் மேல்முறையீடு செய்ய 3 மாதகால அவகாசமும் வழங்கப்பட்டது.

இந்திராவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு

இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணய்யர் வழக்கு விசாரணை முடியும் வரை இந்திரா காந்தி பிரதமராகப் பதவி வகிக்கலாம். ஆனால், அவர் எந்த தீர்மானத்தின் மீதும் வாக்களிக்க முடியாது என்று 1974 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இந்திரா காந்தி பிரதமராக இருக்க தகுதியற்றவர் என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி ஜெயபிரகாஷ் நாராயணன் போராட்டத்தை மேற்கொள்ள தொடங்கினார்.

இந்திரா காந்தி பிரதமராகப் பதவி வகிக்கலாம். ஆனால், அவர் எந்த தீர்மானத்தின் மீதும் வாக்களிக்க முடியாது என்று 1974 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் 'ஹிட் லிஸ்டில்' இந்திரா காந்தி?

இதன்பிறகுதான் இந்திய அரசியல் வரலாறு ஒரு பெரும் திருப்பத்தை சந்தித்தது. நீதிமன்ற உத்தரவு வந்ததும் உடனடியாக அப்போது மேற்கு வங்க முதலமைச்சர் சித்தார்த் ஷங்கர் ராய், இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி உள்ளிட்ட மிகச்சிலருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார் இந்திரா காந்தி. அவர்களிடம் உள்நாட்டு குழப்பங்களால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் 'ஹிட் லிஸ்டில்' தனது பெயர் இருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏவின் உதவியால் சிலி நாட்டு அதிபர் சல்வடோர் அயேந்தேவிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படலாம் என்ற சந்தேகத்தை அவர்களிடம் அச்சமாக தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் 'ஹிட் லிஸ்டில்' தனது பெயர் இருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏவின் உதவியால் சிலி நாட்டு அதிபர் சல்வடோர் அயேந்தேவிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படலாம்...

ஆலோசனையின் முடிவில் அரசமைப்பில் உள்ள 352, 356 பிரிவுகளை பயன்படுத்தி அவசரநிலையை கொண்டுவரலாம் என பரிந்துரை செய்தார் சித்தார்த் ராய். உடனே சித்தார்த் ராயுடன் சென்று குடியரசு தலைவர் ஃபக்ருதீன் அலியை சந்தித்து நிலைமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் அமைச்சரவையை கூட்டி ஒப்புதல் வாங்கும் அளவுக்கு காலம் இல்லை என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவசரநிலைக்கு குடியரசு தலைவர் சம்மதம் தெரிவிக்கவும் உடனடியாக அது தொடர்பான அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு குடியரசு தலைவர் ஃபக்ருதீன் அலியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவரும் அதற்கான கோப்புகளில் கையிழுத்திட்டார்.

இதை தொடர்ந்து நள்ளிரவே கைது செய்யப்பட வேண்டிய அரசியல் தலைவர்களின் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டன. ஜெயபிரகாஷ் காந்தி உள்ளிட்ட 675 பேர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.

வானொலியில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம்

மறுநாள் அதிகாலை வானொலி மூலம் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை நாட்டு மக்களுக்கு அறிவித்தார் பிரதமர் இந்திரா காந்தி. முன்னதாக அவசரமாக கூட்டப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் எட்டு அமைச்சர்களும், ஐந்து இணை அமைச்சர்களும் மட்டுமே பங்கேற்றனர், ஒன்பது அமைச்சர்கள் அப்போது டெல்லியில் இல்லை.

இந்த அமைச்சரவை கூட்டம் தொடங்கியதும், எமர்ஜென்ஸி எனப்படும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதை அறிவித்தார் இந்திரா காந்தி. இந்த தகவலால் அனைத்து அமைச்சர்களும் அமைதி காக்க ஒரு அமைச்சர் மட்டுமே துணிச்சலாக கேள்வி கேட்டார். அது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஸ்வரண் சிங். அவர் கேட்ட கேள்வி, "கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் எந்த சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர் என்பதே".

கட்டுப்பாடுகள்.. கைதுகள்..

இந்த அவசர நிலை காலகட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் முக்கியமானவை பத்திரிகைகள் தணிக்கைகளுக்கு உட்படுத்துவது, இதனால் பல்வேறு முக்கிய நாளிதழ்கள் பல நாட்கள் எதுவும் அச்சிடாமல் வெற்று பக்கங்களை வெளியிட்டு தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்திருக்கின்றன. அதேபோல தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் மிசா சட்டங்கள் மூலம் பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். எமெர்ஜென்சி அமலில் இருந்த 21 மாதத்தில் மிசா சட்டத்தில் மட்டும் 34,988 பேரும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் 75,818 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அரசுக்கு எதிராக குரல் கொடுத்த அனைவரும் கைது செய்யப்பட்டனர், ஆட்சிகள் கலைக்கப்பட்டன. இந்தியாவில் அப்போதைய திமுக அரசு அவசர நிலையை கடுமையாக எதிர்த்தது. 1975 டிசம்பரில் கோவையில் நடந்த தி.மு.க-வின் மாநில மாநாட்டில், அவசரகாலத்துக்கு எதிராகத் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இதன் விளைவு தமிழ்நாட்டின் திமுக அரசு கலைக்கப்பட்டது. பல தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

எமெர்ஜென்சி அமலில் இருந்த 21 மாதத்தில் மிசா சட்டத்தில் மட்டும் 34,988 பேரும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் 75,818 பேரும் கைது
சஞ்சய் காந்தி
சஞ்சய் காந்தி
எமெர்ஜென்சி
அண்ணா அறிவாலயத்தில் தனி அறை! எம்.பி. கனிமொழிக்கு கூடுதல் முக்கியத்துவம்! பின்னணி என்ன?

பேச்சுரிமை உள்ளிட்ட மக்களின் பல்வேறு அடிப்படை உரிமைகள் தடுக்கப்பட்டன. கட்டாய கருத்தடை திட்டம் மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றம் பெயரளவிலேயே செயல்பட்டன. நீதித்துறையின் செயல்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டன, அரசின் கொள்கைகளை எதிர்க்கும் நீதிபதிகள் ஓரங்கட்டப்பட்டனர் அல்லது இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அரசுக்கு எதிராக குரல் கொடுத்த அனைவரும் கைது செய்யப்பட்டனர், ஆட்சிகள் கலைக்கப்பட்டன.

உச்ச அதிகாரம் பெற்ற நபராக சஞ்சய் காந்தி!!

இந்த காலகட்டத்தில் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி உச்ச அதிகாரம் பெற்ற நபராக வளம் வந்தார். அவரது அதிகாரம் எந்த அளவுக்கு என்றால் அவசரநிலை அறிவிக்கப்பட்ட நள்ளிரவில் தலைவர்கள் கைது பட்டியலுடன் நீதிமன்றங்களை மூடுவது மற்றும் பத்திரிகை அலுவலகங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு போன்றவற்ற நடவடிக்கைகளுக்கும் சஞ்சய் காந்தி திட்டமிட்டு இருந்தார் ஆனால் சித்தார்த் ஷங்கர் ராய் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த திட்டங்கள் கைவிடப்பட்டன.

மேலும் பிரதமர் இந்திரா காந்தி 20 அம்ச திட்டங்களை அறிவித்தால் மறுபக்கம் சஞ்சய் காந்தி 5 அம்ச திட்டங்களையும் அறிவித்தார். அதில் கட்டாய கருத்தடை, குடிசை மாற்று போன்ற திட்டங்கள் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.

எமர்ஜென்சியில் முக்கிய முடிவுகள்!

ஒரு பக்கம் கைதுகள் கட்டுப்பாடுகள் என நாடு முழுவதும் கொந்தளிப்பான நிலை இருந்தாலும் மறுபக்கம் வேறு சில முக்கிய மாற்றங்களும் நடைபெற்று வந்தன. குறிப்பாக அரசமைப்பில் 42 வது சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. சோசலிஸ்ட்" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற வார்த்தைகள் அரசமைப்பின் முகப்புரையில் சேர்க்கப்பட்டன. 9 வது அட்டவணையின் கீழ் பல்வேறு புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையீடு மட்டுப்படுத்தப்பட்டது. இப்படி பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதால் இந்த திருத்தம் சிறிய அரசியலமைப்பு என்று கூட விமர்சிக்கப்பட்டது.

அரசமைப்பில் 42 வது சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. சோசலிஸ்ட்" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற வார்த்தைகள் அரசமைப்பின் முகப்புரையில் சேர்க்கப்பட்டன.

அதேபோல இந்த அவசரநிலை காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டது. விவசாய உற்பத்தி, தொழில்துறை உற்பத்தி மற்றும் பணவீக்கம் என பல விவகாரங்களில் மாற்றங்களை கண்டது.

அவசர நிலை காலத்தில் நல்ல வளர்ச்சி!

அந்த ஆண்டுகளின் பொருளாதார ஆய்வுகளின் படி, 1975 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் விவசாய உற்பத்தியில் 48.7 மற்றும் 42.8 மில்லியன் டன் அரிசியையும் உற்பத்தி செய்தது. இது முந்தைய ஆண்டுகளில் 41.5 மில்லியன் டன்னாக இருந்தது. மேலும் கோதுமை மற்றும் பருப்பு வகைகள் உற்பத்தியும் 1975 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் வளர்ச்சியை கண்டது.

தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP) 1975 இல் 6.1 சதவீதமாகவும், 1976 இல் 10.4 சதவீதமாகவும் இருந்தது. இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பெரிய வளர்ச்சி என கூறப்படுகிறது. ஆனால் அவசரநிலைக்கு பிறகான காலகட்டத்தில் இந்த குறியீடு சரிவை சந்தித்தது. இதுதவிர சுரங்கம், குவாரி மற்றும் மின்சாரம் ஆகியவை அந்த இரண்டு ஆண்டுகளில் அதிக வளர்ச்சியைக் கண்டன.

நாட்டின் ஏற்றுமதியை பொறுத்தவரை 1974 இல் ரூ. 3,328.8 கோடியிலிருந்து அவசரநிலை அமலில் இருந்த காலமான 1975 இல் ரூ. 4,042.8 கோடியாகவும், 1976 இல் ரூ. 5,143.4 கோடியாகவும் உயர்ந்தன. அதேபோல இறக்குமதியும் 16.5 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாகவும் குறைந்தது.

ஒழுங்காக பணி செய்த அரசு அதிகாரிகள்!!

"அவசரநிலை அமலில் இருந்த காலகட்டத்தில் நாடுமுழுவதும் அரசு அலுவலகங்கள் முழுவீச்சில் செயல்பட்டன. அதிகாரிகள் சரியான நேரத்திற்கு பணிக்கு வந்தனர், வேலை நேரங்களில் வெளியே செல்வது குறைந்தது. தேங்கியிருந்த மக்கள் பணிகள் விரைந்து முடித்துக்கொடுக்கப்பட்டன போன்றவை எமெர்ஜென்சி காலத்தின் நல்ல பக்கங்கள்" என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது மகள் தமன் சிங் எழுதிய Strictly Personal: Manmohan and Gursharan புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி பல்வேறு சர்ச்சைகள் மற்றும் குழப்பங்கள் நீடித்துக்கொண்டிருந்த நிலையில் தான் 1977, ஜனவரி 18 அன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படும்’ என அறிவிப்பு வெளியானது. அந்த தேர்தலில் இந்திரா காந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியை சந்தித்தார். ஜனதா கட்சி, ஒன்றிய அரசை அமைத்தது. புதிய அரசு, தனது முதல் உத்தரவாக அவசரகாலத்தை ரத்துசெய்தது. 1977, மார்ச் 23 ஆம் தேதி எமெர்ஜென்சி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு வந்த அரசாங்கம் அவசரநிலை காலகட்டத்தில் கொண்டுவந்த பல்வேறு மாற்றங்களை மீண்டும் சீர்படுத்தியது.

எமெர்ஜென்சி
HEADLINES|ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்கள் முதல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிருப்தி வரை!

இந்திய ஜனநாயகத்தின் கருப்பு பக்கத்தில் இந்திரா காந்தி..

சுதந்திரமும் அதிகாரமும் பொறுப்பைக் கொண்டுவருகின்றன. இந்தியாவின் இறையாண்மை கொண்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தப் பேரவையின் மீது பொறுப்பு உள்ளது என சுதந்திரத்திற்கு முந்தைய இரவில் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது பிரபலமான Tryst with Destiny உரையின் போது தெரிவித்தார். ஆனால் அவரது மகள் இந்திரா காந்தி அவசரநிலை அமல்படுத்தியபோது I imposed the Emergency Not Even a Dog breached என கூறினார். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் கருப்பு பக்கத்தில் இந்திரா காந்திக்கு முக்கியமான இடத்தை கொடுத்திருக்கிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com