இந்தியாவில் வளரும் ஸ்மார்ட்போன் தொழில்... டிசம்பருக்குள் 50 ஆயிரம் புதிய வேலைகள்?

இந்தியாவில் வளரும் ஸ்மார்ட்போன் தொழில்... டிசம்பருக்குள் 50 ஆயிரம் புதிய வேலைகள்?
இந்தியாவில் வளரும் ஸ்மார்ட்போன் தொழில்... டிசம்பருக்குள் 50 ஆயிரம் புதிய வேலைகள்?

ஊரடங்கு காரணமாக மிகப்பெரும் வேலையிழப்புகளும் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில், ஒரு நம்பிக்கையான செய்தி.

சர்வதேச மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், பிஎல்ஐ (புரோடக்சன் லிங்க்டு இன்சென்டிவ் ஸ்கீம்) திட்டத்தின்கீழ் இந்தியாவில் உற்பத்தியைப் பெருக்க முடிவு செய்துள்ளன. அதனால், அந்த துறையில் டிசம்பர் மாத இறுதிக்குள் 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது பாக்ஸ்கான், விஸ்ட்ரான், சாம்சங், டிக்சான் மற்றும் லாவா போன்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள், இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளை அமைக்கும் திட்டங்களை வைத்துள்ளன. பிஎல்ஐ திட்டத்தின்படி உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் மத்திய அரசு மானியம் வழங்கும். அதற்கான அறிவிப்பு ஏப்ரம் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் அசெம்ப்ளி, டெஸ்டிங், மார்க்கிங் மற்றும் பேக்கேஜிங் பணிகளில் ஈடுபடும் தொழிற்சாலைகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதனால், எதிர்காலத்தில் உலகத் தரத்திலான எலெக்ட்ரானிக் பொருட்கள் இந்திய மண்ணில் உருவாகும் நிலை ஏற்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com