டெல்லிக்கு 1200 டிராக்டர்களில் படையெடுக்கும் மேலும் 50,000 விவசாயிகள்: வலுக்கும் போராட்டம்

டெல்லிக்கு 1200 டிராக்டர்களில் படையெடுக்கும் மேலும் 50,000 விவசாயிகள்: வலுக்கும் போராட்டம்
டெல்லிக்கு 1200 டிராக்டர்களில் படையெடுக்கும் மேலும் 50,000 விவசாயிகள்: வலுக்கும் போராட்டம்

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் 16வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடத்தும் அடுத்தடுத்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்து கொண்டே இருக்கிறது. இதனால் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 8 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தியிருந்த நிலையில் நாளை டெல்லியின் முக்கிய நுழைவு வாயில் சாலைகளை முடக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே உத்திரப்பிரதேசம்- டெல்லி நுழைவு வாயிலையும், ஹரியான - டெல்லி நுழைவு வாயிலையும் விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக முடக்கியுள்ளனர்.

டெல்லியையும் ஜெய்பூரையும் இணைக்கக்கூடைய சாலைகளை நாளை முடக்க இருக்கிறார்கள். மேலும், சுங்கச்சாவடிகளை கைப்பற்றியபிறகு அதில் செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளார். இது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் போராட்டமாக மாறியுள்ளது என்று பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் வண்டிக்கட்டுக்கொண்டு டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். சுமார் 1200 டிராக்டர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com