ராஜஸ்தான்முகநூல்
இந்தியா
ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்.. 3-வது நாளாக தொடரும் மீட்புப்பணி!
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி 3 நாளாக நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி 3 நாளாக நடைபெற்று வருகிறது.
பப்பாடா எனும் பகுதியில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவன், திறந்து வைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். இதனை தொடர்ந்து உடனடியாக தீயணைப்புத்துறையினர், மாநில மீட்புக் குழுவினர் விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியை தொடங்கினர்.
150 அடியில் சிறுவன் சிக்கியுள்ள நிலையில், சிறுவனுக்கு ஆக்ஸிஜன் கொடுத்துள்ள மீட்புக் குழுவினர், சிறுவன் செயல்பாடுகளை கேமராக்கள் கொண்டு கண்காணித்து வருகின்றனர். பக்கவாட்டில் பள்ளம் தோண்டி சிறுவனை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.