ஆந்திராவை சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் 11 நிமிடங்கள் 19 நொடிகளில் 103 அம்புகளை இலக்கை நோக்கி செலுத்தி வில்வித்தையில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஷிவானி என்ற 5 வயது சிறுமி சிறுவயது முதலே வில்வித்தையில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். இவர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார். இந்நிலையில் ஷிவானி, தற்போது 10 மீட்டர் தொலைவில் நின்றபடி, 11 நிமிடங்கள் 19 நொடிகளில் சரியாக 103 வில்களை இலக்கை நோக்கி செலுத்தி, வில்வித்தையில் புதிய சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியபட வைத்துள்ளார்.