காரைக்கால்: வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

காரைக்காலில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
public
publicpt desk

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கீரைதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா குப்தா. காரைக்காலில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கு, ஐந்து வயதில் சாக்ஷி குப்தா என்ற பெண் குழந்தை இருந்தார்.

Police
Policept desk

சமீபத்தில் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி சாக்ஷி குப்தா கால்தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது வீட்டின் சுற்றுச் சுவர் கேட்டின் மேல் விழுந்ததால் கேட்டில் இருந்த கம்பி சிறுமியின் முதுகில் குத்தியுள்ளது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர்

police station
police stationpt desk

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காரைக்கால் நகர போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com