பெங்களூரு | ”சாலை மோசம்..” பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 5 வயது குழந்தை!
கர்நாடக மாநிலத்தில் முக்கிய முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூரு வருகை தந்துள்ளார். குறிப்பாக, பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஆர்யா என்ற 5 வயது சிறுவன் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தன் கைப்பட எழுதியிருக்கும் அந்தக் கடிதத்தில், ‘நரேந்திர மோடி ஜி, இங்கு, போக்குவரத்து நெரிசல் அதிகம். இதனால், நாங்கள் பள்ளிக்கும் அலுவலகத்திற்கும் தாமதமாகச் செல்கிறோம். சாலை மிகவும் மோசமாக உள்ளது. தயவுசெய்து உதவுங்கள். இப்படிக்கு, ஆர்யா” என அவர் கைப்பட எழுதியிருக்கும் அந்தக் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நகரத்தின் நீண்டகால போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு இணைப்பை மேம்படுத்துவதற்கும் முக்கியமான படியாய் அமையும் மெட்ரோ திட்டச் சேவைக்கு மத்தியில் அந்தச் சிறுவனின் சாலை குறித்த பணிகளும் கவனம் பெறுகிறது.