“பாஜகவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான்”- நிதின் கட்கரி

“பாஜகவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான்”- நிதின் கட்கரி
“பாஜகவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான்”- நிதின் கட்கரி

பாஜகவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஏஎன்ஐ-க்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “ காங்கிரஸ் ஒரு குழப்பமான கட்சி. அக்கட்சியால் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்க முடியாது. பாஜகவால் மட்டுமே இந்தியாவை வளர்ச்சியை நோக்கி பயணிக்க வைக்க முடியும். பாஜகவின் ஐந்தாண்டு கால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான். இனிதான் முழு படமும் வெளிப்படும்.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாஜகவை தோற்கடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளன. ராகுல்காந்தி எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அவரின் நம்பகத்தன்மை மக்களிடம் குறைந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என மக்கள் நம்புவார்கள் என நான் நினைக்கவில்லை. தாங்கள் ஆட்சியமைக்காவிட்டாலும் பரவாயில்லை. மோடி தோற்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com