கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு - மகாராஷ்டிராவில் நிகழ்ந்த சோகம்

மகாராஷ்டிராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sanitation worker
Sanitation workerFile Image

மகாராஷ்டிர மாநிலம் சோன்பேத் பகுதியில் பண்ணை ஒன்றில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக 6 தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கினர். தொட்டியை சுத்தம் செய்யும் போது சபீர் ஷேக் என்ற தொழிலாளி தொட்டிக்குள் விழுந்தார். ஆனால் சக ஊழியர் அவரை காப்பாற்றினார். இருப்பினும், சிறிது நேரத்தில் இரண்டாவது தொழிலாளியும் தொட்டிக்குள் சரிந்து விழுந்தார். பின்னர், மற்ற நான்கு பேர் தங்கள் சக ஊழியர்களைக் காப்பாற்ற உள்ளே சென்றபோது, ​​அவர்கள் அனைவரும் தொட்டிக்குள் சரிந்து விழுந்தனர்.

Ambulance
Ambulance

இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு 5 தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சோன்பெத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com