\
தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் ?

தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் ?

தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் ?
Published on

தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக தேசிய புலனாய்வு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா - நேபாளம் எல்லைப் பகுதியில் உள்ள கோரக்பூரில், 5 பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாகவும், அவர்களது உரையாடல்களை இடைமறித்துக் கேட்டதன் மூலம் இந்த தகவல் தெரியவந்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

டெல்லிக்கு வந்து சேர்ந்த பிறகு, காஷ்மீரில் உள்ள பயங்கரவாத ஆதரவாளர்களை வரவழைத்து, தாக்குதல் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி கொண்டாட்டத்தின்போது தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலையடுத்து, நேபாளம் வழியாக இந்தியாவிற்கு வரும் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com