\
மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த கட்டிடம் : 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அச்சம்

மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த கட்டிடம் : 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அச்சம்

மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த கட்டிடம் : 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அச்சம்
Published on

மகாராஷ்டிராவில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் இன்று மாலை ஆறு மணி ஐம்பது நிமிட வாக்கில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததுள்ளது. 

சுமார் 50க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ராய்காட் மாவட்டம் மகாத் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனேவிலிருந்து மூன்று தேசிய பேரிடர் மீட்பு படையின் அணிகள் மகாத் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இடுபாடுகளிலிருந்து 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆறு ஆண்டு பழமையான இந்த கட்டிடத்தில் 40 குடியிருப்புகள் இருந்துள்ளன.

காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார் ராய்கட் மாவட்ட ஆட்சியர் நிதி சவுத்ரி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com