இந்தியா
பனிச்சரிவிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பனிச்சரிவிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில், பனிச்சரிவில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட ஐந்து ராணுவ வீரர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.
மச்சில் என்ற பகுதியில் நேற்று முன்தினம் காலை பனிச்சரிவில் சிக்கிய அவர்கள் கடும் போராட்டத்திற்குப் பின் மாலை உயிருடன் மீட்கப்பட்டனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக சிறப்பு சிகிச்சைக்கு அவர்களை ஸ்ரீநகருக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் அந்த ஐவரும் ஹெலிகாப்டர் மூலம் இன்று ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். இதனிடையே குரேஸ் பகுதியில் கடந்த 25ஆம் தேதி பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் 14 பேரின் உடல்களும் ஸ்ரீநகருக்கு இன்று எடுத்துச் செல்லப்பட்டன.