\
பீகார்: கார் விபத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் 5 உறவினர்கள் மரணம்

பீகார்: கார் விபத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் 5 உறவினர்கள் மரணம்

பீகார்: கார் விபத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் 5 உறவினர்கள் மரணம்
Published on

பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து ஜமுய்-க்கு காரில் சென்றபோது சிக்கந்திரா-ஷேக்புரா சாலையில் நடந்த கார்விபத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் சுஷாந்த் சிங்கின் உறவினரான ஓ பி சிங்கின் மைத்துனர் மற்றும் சுஷாந்த் சிங்கின் மைத்துனரும் அடங்குவர். ஓ.பி.சிங் ஒரு ஐபிஎஸ் அதிகாரி, அவர் தற்போது ஹரியானா ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஓ.பி.சிங்கின் சகோதரி திங்களன்று பாட்னாவில் இறந்தார். அவரின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்ட குடும்பத்தினர் இன்று காலை ஜமுய்க்கு சென்று கொண்டிருந்தபோது இவர்களின் கார் எல்பிஜி லாரியில் சிக்கி இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஓ.பி.சிங்கின் மைத்துனர் லால்ஜித் சிங், அமித் சேகர் சிங், ராமச்சந்திர சிங், டி ஜி குமாரி மற்றும் ஓட்டுநர் பிரீதம் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக பாட்னாவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com