இந்தியா
கடந்த 8 நாட்களில் 5 கைதிகள் உயிரிழப்பு - திகார் சிறை நிர்வாகம்
கடந்த 8 நாட்களில் 5 கைதிகள் உயிரிழப்பு - திகார் சிறை நிர்வாகம்
கடந்த 8 நாட்களில் 5 கைதிகள் உயிரிழந்திருப்பதாக திகார் சிறை நிர்வாகம் கூறியுள்ளது.
நேற்றையதினம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விக்ரம் என்ற கைதி சுயநினைவின்றி அவரது சிறை அறையில் இருந்துள்ளார். அவரை உடனடியாக மீட்ட திகார் சிறை நிர்வாகிகள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக விளக்கமளித்துள்ள திகார் சிறை நிர்வாகம் கடந்த 8 நாட்களில் 5 கைதிகள் உயிரிழந்திருப்பதாகவும் இவை அனைத்தும் இயற்கையான மரணம்தான் என்றும் கூறியுள்ளனர்.
எனினும் சிறையில் கைதி யாரேனும் உயிரிழந்தால் விசாரிக்க வழிவகுக்கும் சி ஆர் பி சி பிரிவு 176 இன் படி மேஜிஸ்ட்ரட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.