மும்பையில் தீ விபத்து, 5 பேர் பரிதாப பலி!

மும்பையில் தீ விபத்து, 5 பேர் பரிதாப பலி!

மும்பையில் தீ விபத்து, 5 பேர் பரிதாப பலி!
Published on

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பையின் புறநகரில் உள்ளது செம்பூர் பகுதி. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான இங்குள்ள சர்கம் சொசைட்டியில் உள்ள 25 ஆம் எண்கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 11 வது மாடியில் நேற்று இரவு திடீரென்று தீப்பிடித்தது. சிறிது நேரத்திலேயே தீ மள மளவென பரவியது. இதுபற்றி உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 15 வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த விபத்தில் வயதான நபர்கள் ஐந்து பேர் கடுமையான தீக்காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு படை வீரர் உட்பட சிலர் காயம் அடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com