மும்பை ஓஎன்ஜிசி ஆலையில் தீவிபத்து: 7 பேர் உயிரிழப்பு
மும்பை அருகே ஓஎன்ஜிசி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயணைப்பு வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பையில் இருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ள யுரானில் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எண்ணெய், எரிவாயு சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இங்கு இன்று காலை ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து பரவியது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் போராடி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் இந்த ஆலையில் இருந்து ஒரு கி.மீ தூரத்திற்கு உள்ள பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பில் பாதிப்பில்லை என்று ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.