இந்தியா
குழந்தை கடத்தல் கும்பலா? - சந்தேகத்தால் 5 பேர் அடித்துக்கொலை
குழந்தை கடத்தல் கும்பலா? - சந்தேகத்தால் 5 பேர் அடித்துக்கொலை
மகாராஷ்ட்ராவில் குழந்தை கடத்தல் கும்பல் என்ற சந்தேகத்தில் 5 பேர் அடித்துக்கொலை செய்யப்பட்டனர்.
மகாராஷ்ட்ர மாநிலம் துலே நகரத்தை சேர்ந்த ஐந்திற்கும் மேற்பட்டோர் ரயின்பாடா என்ற குக்கிராமத்திற்கு பேருந்தில் வருகை தந்துள்ளனர். அப்போது அங்கிருந்த சந்தை ஒன்றில் அருகே நின்றுகொண்டிருந்த குழந்தைகளிடம் அவர்கள் ஏதோ? பேசியுள்ளனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து தாக்கத்தொடங்கினர். கூட்டம் சேர, சேர தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தல் கும்பல் தொடர்பான வதந்தி பரவிய நிலையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.