காதலித்த பெண்ணை ’பாபநாசம்’ ஸ்டைலில் கொன்று புதைத்த பாஜக பிரமுகர்!

காதலித்த பெண்ணை ’பாபநாசம்’ ஸ்டைலில் கொன்று புதைத்த பாஜக பிரமுகர்!

காதலித்த பெண்ணை ’பாபநாசம்’ ஸ்டைலில் கொன்று புதைத்த பாஜக பிரமுகர்!
Published on

’பாபநாசம்’ பட ஸ்டைலில் காங்கிரஸ் கட்சியை சேர்த்த இளம் பெண்ணைக் கொன்று புதைத்த பாஜக பிரமுகர் மகன்களுடன் கைது செய்யப்பட்டார்.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் கரோடியா (65).பா.ஜ.க. தலைவர் களில் ஒருவரான இவரது மகன்கள் அஜய் (36), விஜய் (38), வினய் (31). இவர்களின் நண்பர் நீலேஷ் காஷ்யப் (28). ஜெகதீஷுக்கு, அதே பகுதியை சேர்ந்த டிவிங்கிள் டாக்ரே என்ற 20 பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான அந்தப் பெண்ணுடனான பழக்கம், நாளடைவில் தகாத உறவுக்கு மாறியது. இதைய டுத்து அந்தப் பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார், ஜெகதீஷிடம். விஷயம் அவர் குடும்பத்தினர் காதுக்கு சென்றது. அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இருந்தும் டிவிங்கிள் ஜெகதீஷிடம் திருமணத்துக்கு  வற்புறுத்திக்கொண்டே இருந்தார். இதனால் வெறுப்படைந்த ஜெகதீஷ், தனது மகன்க ளுடன் சேர்ந்து திட்டம் ஒன்றைத் தீட்டினார். அதன்படி, 2016ம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி டிவிங்கிளை அழைத்தார் ஜெகதீஷ். ’‘உனக்கு, இடம் பார்த்து வைத்திருக்கிறேன். உன் பெயருக்கு எழுதி வைக்க இருக்கிறேன். வா, பார்த்துவிட்டு வரலாம்’’ என்று கூறினார்.

உண்மை என்று நம்பிய டிம்பிள், அவர்கள் காரில் சென்றார். ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்ற அவர்கள், ஏதோ ஒரு நிலத்தைக் காண்பித்து விட்டு, திடீரென டிவிங்கிளின் கழுத்தை நெரித்துக் கொன்றனர். காரில் அவர் உடலை ஏற்றி, வேறொரு இடத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பெட்ரோல் ஊற்றி எரித்தனர். ஓர் இடத்தில் புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல வந்துவிட்டனர்.

டிவிங்கிளின் பெற்றோர், மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தனர். ஏற்கனவே தனது காதலை எதிர்த்த பெற்றோர் மீது டிவிங்கிள் புகார் தெரிவித்திருந்ததால், போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே ஜெகதீஷ், போலீசை திசை திருப்ப நினைத்து, ஓர் இடத்தில் யாரையோ கொன்று புதைத்திருப்பதாகச் சந்தேகமாக இருக்கிறது என்று போலீசில் சொன்னார். போலீசார் சென்று அந்தப் பகுதியில் தோண்டினர். அங்கு நாய் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது.   இதையடுத்து போலீசார் குழப்பமடைந்தனர். பின்னர் டிம்பிள் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், வழக்கைக் கிடப்பில் போட்டனர். சம்பவம் நடந்து 2 வருடங்களாகிவிட்டது. 

இந்நிலையில், மூளைக்குள் மின் அலை செலுத்தி (Brain Electrical Oscillation Signature (BEOS) உண்மையை கண்டறியும் நவீன சோதனையின் படி விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். டிவிங்கிளின் பெற்றோரிடமும், ஜெகதீஷிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் உண்மை வெளியானது. டிவிங்கிள் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் கண்டுபிடித்து தோண்டினர். பிரேஸ்லெட் மற்றும் சில ஆபரணங்கள் அங்கு கைப் பற்றப் பட்டன.

இதுபற்றி போலீஸ் டிஜிபி மிஸ்ரா கூறும்போது, ‘’ BEOS சோதனை அகமதாபாத்தில் நடத்தப்படுவதுதான் வழக்கம். இந்தூரில் இப்போதுதான் முதன் முறையாக நடத்தினோம். இதன் மூலம் இந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெகதீஷும் அவர் மகன்களும் கொலைக்கு முன், அஜய்தேவ்கன் நடித்த ’த்ரிஷயம்’ படத்தைப் பார்த்துள்ளனர். (இந்தப் படம் தமிழில் கமல் நடிப்பில் ’பாபநாசம்’ என்ற பெயரில் வெளியானது). அந்தப் படத்தின் கதைப்படி வழக்கை திசை திருப்ப முயன்றுள்ளனர். இப்போது ஜெகதீஷ், அஜய், விஜய், வினய், நீலேஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com