DeathFile Photo
இந்தியா
ஆந்திரா: சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்து – 5 பேர் உயிரிழப்பு
அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நான்கு பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்: தினேஷ் குணகலா
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள பாரளப்பள்ளியில், சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Car Accidentpt desk
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதனப்பள்ளி போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், படுகாயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நான்கு பேரும் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.