இந்தியா
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு விபத்து: 5 பேர் உயிரிழப்பு
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு விபத்து: 5 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்சந்தூர் ரயில் நிலையம் அருகே நியூ ஃபரக்கா எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில் அதில் இருந்த பயணிகள் விபத்தில் சிக்கிக் கொண்டனர். இதில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ரயில்விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்கவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.