\
கங்கையில் மிதந்து வந்த மனித உடல்களை பெட்ரோல் ஊற்றி எரித்த 5 காவலர்கள் சஸ்பெண்ட்

கங்கையில் மிதந்து வந்த மனித உடல்களை பெட்ரோல் ஊற்றி எரித்த 5 காவலர்கள் சஸ்பெண்ட்

கங்கையில் மிதந்து வந்த மனித உடல்களை பெட்ரோல் ஊற்றி எரித்த 5 காவலர்கள் சஸ்பெண்ட்
Published on

கங்கை ஆற்றில் மிதந்து வந்த மனித உடல்களை பெட்ரோல் ஊற்றி எரித்த 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்லியா அருகே மால்தேபூர் கிராமத்தில் கங்கை ஆற்றில், இறந்தவர்களின் உடல் மிதந்து வந்துள்ளது. அதை கைப்பற்றிய போலீசார், சட்டமுறைப்படி செயல்படாமல், தாங்களாகவே இறந்த உடலை எரியூட்டி தகனம் செய்துள்ளனர். இதற்காக இறந்தவரின் உடலை ஒரு டயரில் கிடத்தி வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

5 போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பல்லியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விபின் தடா, இச்சம்பவத்தில் ஈடுபட்ட 5 காவலர்களை கண்டறிந்து பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com