பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 5 பேர் பரிதாப பலி!
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், ஜம்முவின் பாலகோட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குவதை தொடர்ந்து செய்துவருகிறது. இதில் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, அப்பாவி பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதற்கு இந்திய ராணுவமும் கடுமையான பதிலடி கொடுத்துவருகிறது.
இந்நிலையில் ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி மக்கள் 5 பேர் பலியாயினர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் . மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இத்தகவலை ஜம்மு காஷ்மீர் டிஜிபி எஸ்.பி.வைத் தெரிவித்துள்ளார். இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துவருகிறது.