5 candidates elected uncontested to telangana legislative council
விஜயசாந்திஎக்ஸ் தளம்

தெலங்கானா சட்ட மேலவை | நடிகை விஜயசாந்தி உள்பட 5 பேர் போட்டியின்றித் தேர்வு!

தெலங்கானா மாநிலத்தில் சட்ட மேலவைக்கு 5 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Published on

தெலங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அம்மாநிலத்தின் சட்ட மேலவைக்கு 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானா சட்ட மேலவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் சார்பில் நடிகை விஜயசாந்தி, அதாங்கி தயாகர், கேதவத் சங்கர் நாயக் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான சிபிஐ வேட்பாளர் நெல்லிகண்டி சத்யம் மற்றும் பிஆர்எஸ் வேட்பாளர் ஸ்ரவன் தசோஜு ஆகியோர் களம் கண்டனர். இந்த நிலையில், சட்ட மேலவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து, வேறு எந்த வேட்பாளர்களும் களத்தில் இல்லாததால், மேற்கண்ட 5 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விஜயசாந்தி
விஜயசாந்திகோப்புப் படம்

முன்னதாக, நான்கு BRS MLCக்களும் ஒரு AIMIM MLC-யும் ஓய்வு பெற்றதால், சட்ட மேலவைக்கான தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

5 candidates elected uncontested to telangana legislative council
தமிழக அரசு நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com