கொரோனா சிகிச்சைக்குத் தயாரான 5,231 ரயில் பெட்டிகள் : ரயில்வே அறிவிப்பு

கொரோனா சிகிச்சைக்குத் தயாரான 5,231 ரயில் பெட்டிகள் : ரயில்வே அறிவிப்பு
கொரோனா சிகிச்சைக்குத் தயாரான 5,231 ரயில் பெட்டிகள் : ரயில்வே அறிவிப்பு

5,231 ரயில் பெட்டிகள் கொரோனா வைரஸ் பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றப்பட உள்ளது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 2,97,001 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,46,074 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 8,321 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நாள்தோறும் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசிலிருந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்தாலும், கூடுதலாகச் சிகிச்சையாக்கப் படுக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தயார்ப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படாத ரயில்களின் பெட்டிகளைத் தற்காலிக கொரோனா வைரஸ் சிகிச்சை மையங்களாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதில் 60 பெட்டிகள் தெலுங்கானா சார்பிலும், 10 பெட்டிகள் டெல்லி சார்பிலும் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com