தொடங்கியது 4ஆம் கட்ட மக்களவை தேர்தல்... எங்கு எத்தனை தொகுதிகளில் நடக்கிறது?

மக்களவைத் தேர்தலில் நான்காம் கட்டமாக இன்று 96 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
3 ஆம் கட்ட தேர்தல் -வாக்கு சதவீதம்
3 ஆம் கட்ட தேர்தல் -வாக்கு சதவீதம் முகநூல்

நான்காம் கட்ட தேர்தல்

மக்களவைத் தேர்தலில் நான்காம் கட்டமாக, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் 9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 13, மகாராஷ்டிராவில் 11, மத்திய பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா 8 தொகுதிகள், பீகாரில் 5, ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவில் தலா 4 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் ஆந்திர பிரதேசத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நான்காம் கட்டத் தேர்தலில் 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் 17.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 1.92 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தெலங்கானாவின் 17 மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை அதிகரிக்க, வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளில் குடிநீர் வசதி, மின்விசிறி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை நடந்த மூன்று கட்டத் தேர்தலில் 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 283 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3 ஆம் கட்ட தேர்தல் -வாக்கு சதவீதம்
நான்காம் கட்ட தேர்தல்.. களத்தில் யூசுப் பதான்.. முக்கிய வேட்பாளர்கள் யார்? அவர்களது பின்னணி என்ன?

“ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்” பிரதமர் மோடி

இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “மக்களவைத் தேர்தலின் 4வது கட்டமான இன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்தத் தொகுதிகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என்றும், இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் வாக்களிப்பதில் இந்த எழுச்சியை வலுப்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன். வாருங்கள், அனைவரும் நமது கடமையைச் செய்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்!” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடிமுகநூல்

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

3 ஆம் கட்ட தேர்தல் -வாக்கு சதவீதம்
தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மாற்றாக நினைக்கிறதா ஆம் ஆத்மி? விரிவான அலசல்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com