ரூ. 20 லட்சம் கோடி திட்டங்கள் : நிர்மலா சீதாராமன் இன்று 4-ஆம் கட்ட அறிவிப்பு

ரூ. 20 லட்சம் கோடி திட்டங்கள் : நிர்மலா சீதாராமன் இன்று 4-ஆம் கட்ட அறிவிப்பு
ரூ. 20 லட்சம் கோடி திட்டங்கள் : நிர்மலா சீதாராமன் இன்று 4-ஆம் கட்ட அறிவிப்பு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ரூ.20 லட்சம் கோடி திட்டங்களுக்கான 4-ஆம் கட்ட அறிவிப்பை வெளியிடுகிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் சமீபத்தில் உரையாற்றினார் அப்போது இந்திய பொருளாதாரத்தை மீட்பதற்காக ரூ. 20 லட்சம் கோடிக்கு பொருளாதார திட்டங்கள் வெளியிடப்படும் என்றார். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் ஊக்கம் பெரும் எனவும் குறிப்பிட்டிருந்தார். என்னென்ன அறிவிப்புகள் என்று மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பார் எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு நாளும் திட்டங்களை வெளியிட்டு வருகிறார். இதுவரை, 3 மாத பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்துவது, 3 கோடி விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடனுதவி போன்ற விவசாயிகள், சிறு குறு தொழில்கள் குறித்த அறிவிப்புகள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதம் இலவச உணவுப்பொருட்கள், சாலையோர வியாபாரிகளுக்குச் சிறப்புக்கடன் திட்டம், மீனவர்கள், மலைவாழ் மக்களுக்குத் திட்டங்கள், விவசாயம், பால்வளம், மீன்வளம், கால்நடை திட்டங்கள், வேளாண்துறை கட்டமைப்பு திட்டம், மூலிகை பொருட்கள் உற்பத்தி போன்றவற்றின் திட்டங்களை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று 4-ஆம் கட்டமாக திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவிக்கிறார். டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். இதில் விவசாயிகள், கார்ப்பரேட், சுற்றுலாத்துறை, கெமிக்கல், உரத்தொழிற்சாலை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com