தெருநாய்களால் பரிதாபமாக உயிரிழந்த 49 வயது டீ நிறுவன உரிமையாளர்!

உடனடியாக விரைந்த அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
திரு பரக் தேசாய்
திரு பரக் தேசாய் முகநூல்

49 வயதான பிரபல வாஹா பக்ரி டீ நிறுவனத்தின் உரிமையாளர் திரு பரக் தேசாய், தெரு நாய்கள் துரத்தியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரக் தேசாய்
பரக் தேசாய்முகநூல்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வரும் பிரபல டீ நிறுவனம் வாஹா பக்ரி டீ குரூப். இதன் உரிமையாளர் 49 வயதான பரக் தேசாய். இவர் கடந்த 15 ஆம் தேதி மாலையில் தன் வீட்டின் அருகில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.

அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய்களின் கூட்டம் அவரை துரத்த ஆரம்பிக்கவே அவற்றிடம் இருந்து தப்பிக்க எண்ணிய அவர் வேகமாக ஓடியுள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த பரக் தேசாய்க்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.உடனடியாக விரைந்த அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு 7 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று மாலை (24.10.2023) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திரு பரக் தேசாய்
மாடு உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனின் அறிவுறுத்தல்

தற்போது உள்ள சூழலில் தெருநாய்களின் எண்ணிக்கை முன்பை காட்டிலும் பண் மடங்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்சமயங்களில் மாடுகளினால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த தெரு நாய்களினால் பாதுகாப்பற்ற சூழ்நிலையை அடைந்து வருகிறோம். அதிகாரிகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் இது போன்ற விபத்துகளை தடுக்க இயலும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com