எல்.முருகன் உள்பட 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு

எல்.முருகன் உள்பட 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு
எல்.முருகன் உள்பட 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக இடம்பெற்ற 43 மத்திய அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

  1. நாராயன் தாட்டூ ரானே: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர். மகாராஷ்டிரா எம்.எல்.ஏவாக 6 முறை பதவி வகித்தவர். அரசியலுக்கு முன் 1971 முதல் 1984 வரை வருமான வரித்துறையில் சேவையாற்றியவர்.
  2. சர்பானந்த சோனாவால்: அசாமின் முதல்வராக 2016 முதல் 2021வரை பதவி வகித்தவர். அசாமில் இருந்து இரண்டு முறை எம்.பியாகவும் தேர்வானவர். மத்திய அமைச்சரவையில் விளையாட்டு துறை இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
  3. விரேந்திர குமார்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த எம்.பி. மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சராக இருந்தவர்.
  4. ஜோதிராதித்ய சிந்தியா: முந்தைய காங்கிரஸ் அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். மத்திய பிரதேசத்தில் இருந்து ஐந்து முறை மாநிலங்களவைக்கு தேர்வானவர்.
  5. ராமச்சந்திர பிரசாத் சிங்: பீகாரில் இருந்து மாநிலங்களவைக்கு 2வது முறையாக தேர்வானவர். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.
  6. அஸ்வின் வைஷ்ணவ்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. அரசு - தனியார் பங்களிப்புக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கியவர். ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானவர்.
  7. பசுபதி குமார் பராஸ்: பீகார் அரசில் அமைச்சராக பதவி வகித்தவர். பீகாரின் ஹாஜிபூர் தொகுதி எம்.பி.
  8. கிரண் ரிஜ்ஜூ: மத்திய அமைச்சரவையில் விளையாட்டுத்துறை இணை அமைச்சராக இருந்தவர்.
  9. ராஜ்குமார் சிங்: இந்திய முன்னாள் உள்துறை செயலாளராக இருந்தவர். 2014 முதல் பீகார் அர்ராவுக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
  10. ஹர்தீப் சிங் புரி: மத்திய அமைச்சரவையில் வீட்டுவசதி துறை இணையமைச்சராக இருந்தவர்.
  11. மன்சுக் மாண்டவ்யா: மத்திய அமைச்சரவையில் கப்பல் போக்குவரத்து இணையமைச்சராக இருந்தவர்.
  12. பூபேந்தர் யாதவ்: ராஜஸ்தானில் இருந்து 2வது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வானவர். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவர்.
  13. பர்ஷோத்தம் ரூபாலா: மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை இணையமைச்சராக பதவி வகித்தவர்.
  14. கிஷன் ரெட்டி: மத்திய அமைச்சரவையில் உள்துறை இணையமைச்சராக பதவி வகித்தவர்.
  15. அனுராக் சிங் தாக்கூர்: மத்திய அமைச்சரவையில் நிதித்துறை இணையமைச்சராக பதவி வகித்தவர்.
  16. பங்கஜ் சவுத்ரி: உத்தரப் பிரதேசத்தில் இருந்து 6வது முறையாக எம்.பியானவர். கோரக்பூரின் துணை மேயராகவும் பதவி வகித்தவர்.
  17. அனுப்பிரியா சிங் படேல்: மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்தவர்.
  18. சத்யபால் சிங் பாஹேல்: உத்தரப் பிரதேசத்தில் இருந்து 5 முறை எம்.பி.யானவர். உத்தரப் பிரதேச அரசில் அமைச்சராக பதவி வகித்தவர்.
  19. ராஜீவ் சந்திரசேகர்: கர்நாடகாவில் இருந்து 3 ஆவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வானவர். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
  20. ஷோபா கரண்லாஜே: கர்நாடகாவில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். கர்நாடக அரசில் அமைச்சராக பணியாற்றியவர்.
  21. பானு பிரதாப் சிங் வர்மா: உத்தரப் பிரதேசத்தில் இருந்து 5 ஆவது முறையாக எம்.பி.யானவர். வழக்கறிஞர், உத்தரப் பிரதேச எம்எல்ஏவாகவும் இருந்தவர்.
  22. தர்ஷனா விக்ரம் ஜார்தோஷ்: குஜராத்தில் இருந்து 3 முறை எம்.பி.யாக தேர்வானவர். குஜராத்தின் சமூகநல வாரிய உறுப்பினராகவும் உள்ளார்.
  23. மீனாட்சி லேகி: புதுடெல்லியில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர், சமூக சேவகர்
  24. அன்னபூர்ணா தேவி: ஜார்க்கண்டில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில் 4 முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்
  25. நாராயணசாமி: கர்நாடகாவில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். கர்நாடக எம்எல்ஏவாக 4 முறை பதவி வகித்துள்ளார்.
  26. கவுசல் கிஷோர்: உத்தரப் பிரதேசத்தில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். உத்தரப் பிரதேச அரசில் இணை அமைச்சராக பதவி வகித்தவர்.
  27. அஜெய் பட்: உத்தராகண்டில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். உத்தராகண்ட் அரசில் அமைச்சராக பதவி வகித்தவர்.
    அரசியலுக்கு வருவதற்கு முன் வழக்கறிஞராக இருந்தார்.
  28. பி.எல். வர்மா: உத்தரப் பிரதேசத்தில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர்
  29. அஜெய் குமார்: உத்தரப் பிரதேசத்தில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்தவர்
  30. சவுஹான் தேவுசின்: குஜராத்தில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். குஜராத்தின் எம்எல்ஏவாகவும் 2 முறை பதவி வகித்துள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன் அகில இந்திய வானொலியில் பொறியாளராக பணியாற்றியவர்.
  31. பகவந்த் கூபா: கர்நாடகாவில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர்
  32. கபில் மோரேஷ்வர் பாட்டீல்: மகாராஷ்டிராவில் இருந்து 2 ஆவது முறையாக எம்.பி.யானவர். கிராம பஞ்சாயத்துகளில் தலைவராக பதவி வகித்தவர்
  33. பிரதிமா பவுமிக்: திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். முதல்முறையாக எம்.பி. எளிய விவசாய குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர். திரிபுரா பல்கலைக்கழகத்தில் உயிரி அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்.
  34. டாக்டர் சுபாஷ் சர்கார்: மேற்குவங்கத்தில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். மேற்குவங்க எய்ம்ஸ் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்.
  35. டாக்டர். பகவத் கிஷண்ராவ் கராத்: மகாராஷ்டிராவில் இருந்து முதல் முறையாக மாநிலங்களவை எம்.பி.யானவர். அவுரங்கபாத் மாநகராட்சியில் மேயராக பதவி வகித்துள்ளார். குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர், பொது மருத்துவம் படித்தவர்.
  36. டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்: மணிப்பூர் மாநிலத்தில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். அரசியலில் நுழைவதற்கு முன் புவியியல் பேராசிரியராக பணியாற்றியவர்.
  37. டாக்டர் பாரதி பிரவின் பவார்: மகாராஷ்டிராவில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். அரசியலில் நுழைவதற்கு முன் மருத்துவராக பணியாற்றியவர்.
  38. பிஷ்வேஸ்வர் துடு: ஒடிஷாவில் இருந்து முதல்முறையாக எம்.பி.யானவர். நீர்வளத்துறையில் மூத்த பொறியாளராக பணியாற்றியவர்.
  39. சாந்தனு தாக்கூர்: மேற்குவங்கத்தில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர். மத்துவா சமூகத்தின் மூத்த தலைவர்
  40. டாக்டர். முன்ஜபரா மகேந்திரபாய்: குஜராத்தில் இருந்து முதல் முறையாக எம்.பி.யானவர்.அரசியலில் நுழைவதற்கு முன் இருதய சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர். குஜராத்தில் ரூ.2 டாக்டராக மக்களுக்கு சேவையாற்றியவர்.
  41. ஜான் பர்லா: மேற்குவங்கத்தில் இருந்து முதல்முறையாக எம்.பி.யானவர். தேயிலை தோட்ட பணியாளர்களின் உரிமைக்காக உழைத்தவர். எளிய குடும்பத்தில் பிறந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக வாழ்வை தொடங்கியவர்.
  42. எல்.முருகன்: சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியவர். தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தவர். தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்தவர்.
  43. நிஷித் பிராமணிக்: மேற்குவங்கத்தின் கூச் பீஹார் தொகுதி எம்.பி. ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com