பிரமாண்டமாக நடந்த யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழா

பிரமாண்டமாக நடந்த யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழா

பிரமாண்டமாக நடந்த யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழா
Published on

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் 21ஆவது முதலமைச்சராக கோரக்பூர் தொகுதி எம்பியான யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு ஆளுநர் ராம் நாயக் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அவருடன் உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். 2 துணை முதலமைச்சர்கள் உள்பட 47 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். லக்னோவில் 96 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்துள்ள ஸ்மிர்தி உப்வான் மைதானத்தில் இதற்காக சுமார் 100 பேர் அமரக்கூடிய அளவிலான மிகப்பெரிய மேடை அமைக்கப்பட்டது. பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட பிரபலங்கள் உள்பட சுமார் ஒரு லட்சம் பேர் இந்த விழாவில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com