உ.பி யில் கடந்த 2 நாட்களில் மேலும் 42 குழந்தைகள் உயிரிழப்பு

உ.பி யில் கடந்த 2 நாட்களில் மேலும் 42 குழந்தைகள் உயிரிழப்பு

உ.பி யில் கடந்த 2 நாட்களில் மேலும் 42 குழந்தைகள் உயிரிழப்பு
Published on

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக பி.ஆர்.டி மருத்துவ கல்லூரி முதல்வர் பி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில வாரங்களுக்கு முன்  ஆக்சிஜன் பற்றாக்குறையினால் குழந்தைகள் நலப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, புதிதாக பிறந்த குழந்தைகள் உள்பட 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன.

இந்நிலையில், தற்போது கடந்த 48 மணிநேரத்தில் மேலும் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பி.ஆர்.டி மருத்துவ கல்லூரி முதல்வர் பி.கே.சிங் தெரிவித்துள்ளார். இதில் 7 குழந்தைகள் மூளைவீக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், மற்ற குழந்தைகள் பிற காரணங்களால் இறந்ததாக பி.ஆர்.டி மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com