புத்தாண்டு மாலையில் நிமிடத்திற்கு 4000 ஆர்டர்களை பெற்ற ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனங்கள்!

புத்தாண்டு மாலையில் நிமிடத்திற்கு 4000 ஆர்டர்களை பெற்ற ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனங்கள்!
புத்தாண்டு மாலையில்  நிமிடத்திற்கு 4000 ஆர்டர்களை பெற்ற ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனங்கள்!

2021 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அன்று மாலையில் ஸ்விகி, ஸோமேட்டோ மாதிரியான ஆன்லைன் உணவு டெலிவரி அப்ளிகேஷனில் நிமிடத்திற்கு 4000 ஆர்டர்கள் குவிந்துள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு உணவு டெலிவரி அப்ளிகேஷனை பயன்படுத்தி ஆர்டர் செய்யும் வழக்கம் அதிகரித்திருந்தது. இதற்கு கொரோனா ஊரடங்கும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. அதன் மூலம் உணவாக தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களும் தொழிலை எந்தவித இடர்பாடுமின்றி செய்து வந்தனர்.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிகபட்சமாக ஸ்விகியில் நிமிடத்திற்கு 5500 ஆர்டர்ரும், ஸோமேட்டோவில் 4254 ஆர்டர்களும் குவிந்துள்ளன. ஒப்பீட்டு அளவில் இரண்டிலும் சராசரியாக நிமிடத்திற்கு 4000 ஆர்டர்கள் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

குறிப்பாக பெரு நகரங்களை காட்டிலும் சிறு மற்றும் குறு நகரங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் ஆர்டர் வந்ததாகவும் ஸ்விகியின் வட்டாரம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக பல உணவகங்களில் உணவு காலியாக விட்டதாகவும். அதனால் உணவை டெலிவரி செய்ய முடியவில்லை எனவும் வருந்துகின்றனர் இந்த நிறுவனங்களின் நிறுவனர்கள். அதே நேரத்தில் வரும் காலத்தில் முன்கூட்டியே இதற்கு தயாராக இருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். 

“மொத்த விற்பனையில் புத்தாண்டு தினத்தன்று மட்டும் 75 கோடி ரூபாய்க்கு மொத்த விற்பனை நடந்துள்ளது. அனைத்து உணவகங்களிலும் ஆர்டருக்கான உணவுகள் தடையில்லாமல் கிடைத்திருந்தால் 100 கோடி ரூபாயை அன்றைய நாளில் எட்டியிருப்போம்” என தெரிவித்துள்ளார் ஸோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல். 

உணவகத்தின் உரிமையாளர்களும் தங்களது வர்த்தகத்திற்கு பக்க பலமாக இருந்ததாகவும் இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் உணவு டெலிவரி தொடர்பான புகாரும் குறைவாக இருந்ததாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நன்றி : தி நியூஸ் மினிட் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com