“பாதுகாப்பு படை சரியான பதிலடி கொடுக்கத் தவறிவிட்டது”-மணிப்பூர் MLA-க்கள் பிரதமருக்கு கடிதம்!

மணிப்பூர் பிரச்னையை அரசியல்ரீதியாக தீர்க்க வேண்டும் என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.
manipur
manipurtwitter

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டன, பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதும் முகாம்களில் உள்ளனர்.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்
manipur
”காங்கிரஸூம், நீதிமன்றத்தின் உத்தரவும்தான் காரணம்” மணிப்பூர் குறித்து மோடி பேசியது என்ன?-முழுவிபரம்

இந்த நிலையில் தற்போதைய மணிப்பூர் நிலவரம் மற்றும் வன்முறைக்கான காரணம் குறித்து பிரதமருக்கு மணிப்பூர் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் மணிப்பூர் வன்முறைக்கு, எல்லையில் சிலர் ஊடுருவியதே காரணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக 40 எம்.எல்.ஏக்கள் கடிதம் எழுதியாக கூறப்பட்ட நிலையில், 10 எம்.எல்.ஏக்களே எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவசாய தோட்டங்களுக்கு செல்லும் மக்கள், உயரமான பகுதிகளில் இருந்து தாக்கப்படுவதாகவும் மத்திய பாதுகாப்பு படையினர் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

குறிப்பாக பாதுகாப்பு படையினர் சரியான பதிலடி கொடுக்கத் தவறிவிட்டதாகவும், மாநிலத்தில் நீடித்த அமைதியை உறுதிப்படுத்த மத்திய பாதுகாப்புப் படைகள் முனைப்பான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com