ம.பி.: 22 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுமி.. மீட்கப்பட்டும் உயிரிழந்த சோகம்!

மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுமி மீட்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
bore well
bore welltwitter

மத்தியப் பிரதேசம் ராஜ்கர்க் மாவட்டத்தில் பிப்லியா ரசோடா கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியான மாஹி, நேற்று மாலை வீட்டின் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். அவரது அழுகைச் சத்தத்தைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநில பேரிடர் மீட்பு படை சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ 22 அடி ஆழத்தில் சிறுமி சிக்கிக்கொண்ட நிலையில், ஆழ்துளை கிணற்றின் அருகே 25 அடி ஆழம் குழி தோண்டி இன்று (டிச.6) அதிகாலை சிறுமியைப் பத்திரமாக மீட்டனர்.

pti

தொடர்ந்து அருகில் இருந்த மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட சிகிச்சை முடிந்து மேல்சிகிச்சைக்காக தலைநகர் போபாலுக்கு அனுப்பபட்டார். இந்த நிலையில், இன்று காலை அந்தச் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆழ்துளை கிணற்றில் சிக்கி 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்: ஐந்தரை ஆண்டு காத்திருப்புக்குப் பின் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com