சத்தீஸ்கர்: விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 4 வயது சிறுமி 28 வயது இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “இந்த சம்பவம் 22 ஆம் தேதி நடைபெற்றது. அன்று மாலை பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் சிறுமி மதியத்திலிருந்து காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையின் போது சிறுமி கடைசியாக, சேகர் கோர்ராம் என்பவரின் வீட்டின் முன் காணப்பட்டார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட கோர்ராம் கட்டுமானத்தில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு அவரை பிடித்து விசாரணை செய்ததில், சிறுமி தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சிறுமியை வீட்டிற்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். மேலும், சிறுமி கத்த முயன்றபோது ஒரு துணியால் அவள் முகத்தை மூடியதில் முச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.
கோர்ராம் வீட்டிலிருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ராம் கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தனர்.