கர்நாடகா: ஆண் நண்பருடன் சேர்ந்து 4 வயது சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை - தாய் உட்பட இருவர் கைது

கர்நாடகாவில் 4 வயது சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தாய் மற்றும் அவரது ஆண் நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Mother Accused
Mother Accusedpt desk

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

சிக்கபல்லபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு 6 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக கணவரை பிரிந்த அந்தப் பெண், தன் ஆண் நண்பருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக 4 வயது சிறுமியை தாயும், அவரது ஆண் நண்பரும் அறையில் அடைத்து சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆண் நண்பர்
கைது செய்யப்பட்ட ஆண் நண்பர்pt desk

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Mother Accused
சென்னை அழைத்துவரப்பட்டார் ஜாபர் சாதிக்... 5 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com