இந்தியா
கால்வாயில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய இளைஞர் - வைரல் வீடியோ
கால்வாயில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய இளைஞர் - வைரல் வீடியோ
ராஜஸ்தானில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த 4வயது சிறுவனை இளைஞர் ஒருவர் மீட்ட காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சாலை ஒன்றில் கால்வாயில் அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த 4 வயது சிறுவன், கால்வாயில் இருந்த கல் மீது காலை வைத்து தாவிச் செல்ல முயன்றான். ஆனால் அந்தச் சிறுவன் தடுமாறி கால்வாயில் விழுந்தார்.
அத்துடன் அருகில் நகர்ந்து பாதாள சாக்கடைக்குள் சிக்கிக்கொண்டு மூழ்கினார் இதனைக் கவனித்த ஒரு இளைஞர், சட்டென விரைந்து குழந்தையை பத்திரமாக மீட்டார். இதனால் அந்தச் சிறுவன் உயிர்பிழைத்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது பரவி வருகிறது.

