மீட்கப்பட்ட சிறுமி Twitter
இந்தியா
ரயில் நிலைய இரும்பு தூணில் சிக்கிய 4 வயது குழந்தை.. ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்பு
ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தபோது இரும்புத் தூணில் சிக்கிய 4 வயது சிறுமி ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டார்.
ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் பயணம் செய்வதற்காக ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியரின் 4 வயது மகள் நடைமேடையில் இருந்த இரும்பு தூண் அருகே நின்று விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் தலை இரும்புத் தூண் இடையே சிக்கிக் கொண்டது. தனது தலையை வெளியே எடுக்க முடியாமல் அவதிப்பட்ட குழந்தை வலியால் அலறியது. இதனைக்கண்ட பெற்றோரும் குழந்தையை மீட்க முடியாமல் பதட்டமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசாரும், ஊழியர்களும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதன்படி இரும்பு கட்டர் மெஷினை கொண்டு வந்து தூணை வெட்டி எடுத்த ஊழியர்கள், பத்திரமாக குழந்தையை மீட்டனர்.