ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினரின் என்கவுண்ட்டர் - 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினரின் என்கவுண்ட்டர் - 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினரின் என்கவுண்ட்டர் - 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால், புல்வாமா மற்றும் ஹந்த்வாரா மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது

இது தொடர்பான தகவல்களை பகிர்ந்த காஷ்மீர் ஐஜிபி, "நேற்று இரவு நான்கு - ஐந்து இடங்களில் நாங்கள் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டோம். இந்த நடவடிக்கையில் புல்வாமாவில் ஒரு பாகிஸ்தானியர் உட்பட ஜெய்ஷ் இ-முகமது அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.கந்தர்பால் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் ஒரு லஷ்கர் அமைப்பை சேர்ந்த  பயங்கரவாதியம், ஹந்த்வாராவில் ஒரு லஷ்கர் அமைப்பை சேர்ந்த  பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர். மேலும், ஹந்த்வாரா மற்றும் புல்வாமாவிலும் தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படையின்  என்கவுன்டர்கள் நடத்தப்பட்டது, இதில் மேலும் ஒரு பயங்கரவாதி உயிருடன் கைது செய்யப்பட்டார்" என தெரிவித்தார்  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com