கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு
Published on

டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ளது சீலம்புர். இங்கு 4 மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இதன் தரைதளத் தில் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் நேற்றிரவு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இதற்காக ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர். அப்போது திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. 

இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் பெயர் ஹீனா என்பது பின்னர் தெரிய வந்தது. 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com