கார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு

கார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு

கார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு
Published on

கார் மரத்தில் மோதிய விபத்தில் ஹாக்கி வீரர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் ஹோசன்காபாத்தில் தியான் சந்திரா டிராபிக்கான ஹாக்கி போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க இடார்சி என்ற பகுதியில் இருந்து ஒரு காரில் ஹாக்கி வீரர்கள் சிலர் சென்றுகொண்டிருந்தனர். ரைசல்பூர் என்ற இடத்துக்கு அருகே இன்று காலை கார் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தின் மீது கார் பயங்கரமாக மோதியது.

இதில் காரில் இருந்த 4 ஹாக்கி வீரர்கள், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பவர்கள்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com