அசாமில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு
கனமழை காரணமாக அசாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
அசாம் மாநிலத்தில் கடந்த இரு தினங்களான கடுமையான மழை பெய்து வருகிறது. அசாம் தெற்கு பகுதிகளின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.பாரக் பள்ளத்தாக்கில் உள்ள ஹெய்ல்கண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதேபோல் கரீம்கஞ்ச் மற்றும் காச்சர் மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மூன்று இடங்களிலும் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 4 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடங்களுக்குச் சென்ற மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அசாம் மாநில அரசு உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளது.
மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.