தாஜ்மஹால் வளாகத்தில் காவிக் கொடி அசைத்த நான்கு பேர் கைது! ஆக்ராவில் பரபரப்பு

தாஜ்மஹால் வளாகத்தில் காவிக் கொடி அசைத்த நான்கு பேர் கைது! ஆக்ராவில் பரபரப்பு
தாஜ்மஹால் வளாகத்தில் காவிக் கொடி அசைத்த நான்கு பேர் கைது! ஆக்ராவில் பரபரப்பு

தாஜ்மஹால் வளாகத்தில் நான்கு பேர் காவி வண்ண கொடி அசைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் உள்ள முக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான தாஜ்மகால், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. இக்கட்டிடம் முகலாய மன்னரான ஷாஜகானால், இறந்து போன அவரது மனைவி மும்தாஜ் நினைவாக 22 ஆயிரம் பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தாஜ்ஹாலை காணச் சென்ற 4 பேர் திடீரென காவிக் கொடிகளை கையில் ஏந்தியபடி வீடியோ எடுத்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

தாஜ்மஹாலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் நிலவிவரும் நிலையில், அங்கு காவிக் கொடிகளை காட்டி கோஷம் எழுப்பியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எஃப்) அளித்த புகாரின் பேரில், தாஜ்மஹால் வளாகத்தில் காவிக் கொடி காட்டிய ஒரு பெண் உள்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்று தாஜ்மஹாலுக்கு சென்று, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘காவிக் கொடிகளுடன் வாலிபர்கள் நுழைந்தது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரித்து 2 அல்லது 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்வார்கள்’ என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com