இந்தியா
ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் 2 மணி நேரத்திற்குள் நேற்றிரவு அடுத்தடுத்து நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
முதலில் இரவு 10.42 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆகவும், அடுத்த ஆறு நிமிடங்களுக்கு பிறகு நிகழ்ந்த நிலநடுக்கம் 5.5 ஆகவும் பதிவானது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த பீதியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், அடுத்ததாக இரவு 10.58 மணிக்கும், பின்னர் 11.20-க்கும் மீண்டும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் முறையே 4.6 ஆகவும், 5.4 ஆகவும் இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதற்கான எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.