ஹரியானா: சுரங்க நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு - தொடரும் மீட்புப்பணிகள்

ஹரியானா: சுரங்க நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு - தொடரும் மீட்புப்பணிகள்
ஹரியானா: சுரங்க நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு - தொடரும் மீட்புப்பணிகள்

ஹரியானாவின் சுரங்க குவாரியில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிவானியில் உள்ள டடம் சுரங்க குவாரியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில், பல வாகனங்களும், தொழிலாளர்களும் மண்ணில் புதைந்தனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் தேசிய, மாநில பேரிடர் மீட்புபடையினர், மற்றும் ராணுவ வீரர்கள் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்கிடையில் மேலும் ஐந்து பேர் வரை சிக்கிக்கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com