இந்தியா
ஓஎன்ஜிசிக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் பலி
ஓஎன்ஜிசிக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் பலி
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை ஜூகு பகுதியில் இருந்து ஓஎன்ஜிசி எண்ணெய் வயல் பகுதிக்கு சென்ற போது விமானம் காணாமல் சென்றுள்ளது. 5 ஓஎன்ஜிசி அதிகாரிகள் மற்றும் இரு பைலட்டுகளுடன் சென்ற ஹெலிகாப்டரை கடற்படை விமானங்களும் கப்பல்களும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.. இதற்கிடையில் மும்பை கடலோரத்தில் உடைந்த நிலையில் சில பொருட்கள் மிதந்ததாக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மும்பை அருகே கடலில் மிதந்த 4 உடல்களை கடலோர காவல் படையினர் மீட்டனர். ஹெலிகாப்டரில் இருந்த மீதமுள்ள 3 பேரை தேடும் பணியில் 5 கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்கள், 2 விமானங்கள் ஈடுபட்டுள்ளன.